எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
2020ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் சினிமாவிற்கு மட்டும் மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ளன. சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் 5 விருதுகளையும், வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் 3 விருதுகளையும், மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படம் 2 விருதுகளையும் வென்றுள்ளன. இதை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தேசிய விருது கிடைத்தது பற்றி ஜிவி பிரகாஷ், சுதா, அபர்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்
தேசிய விருது கிடைத்தது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பேட்டி: தேசிய விருது கிடைக்கும் என நினைக்கவில்லை எதிர்பாராமல் கிடைத்துள்ளது. சூரரைப்போற்று படத்தின் இந்தி பதிப்புக்கும் நானே இசையமைக்கிறேன். இந்த விருதுக்கு அடுத்து பெரிய விருது என்ன இருக்க முடியும். நீண்ட காத்திருப்புக்கு பின் அந்த நாள் வந்து விட்டது. ஒட்டுமொத்த குழுவா உழைத்த படம் சூரரைப்போற்று. இந்த படத்திற்கு இவ்வளவு விருது கிடைத்தது மகிழ்ச்சி. எனக்கு முதல் தேசிய விருது கிடைத்ததும் மகிழ்ச்சி. விருதுக்கு தேர்வான மற்ற எல்லா கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்போது ஒரு நம்பிக்கை வருகிறது. இன்னும் தொடர்ந்து வேலை செய்ய தூண்டுகிறது. அப்பா உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.
வசந்த்
சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்ற ‛சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' பட இயக்குனர் வசந்த் அளித்த பேட்டி: ரொம்ப மகிழ்ச்சி. இப்படத்திற்கு சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகை உள்பட மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. பெண்கள் பற்றி பேசிய இப்படத்திற்கு கிடைத்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி.
சுதா கொங்கரா
சூரரைப்போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா பேட்டி: எந்த ஒரு படத்தையும் சரியாக வெளி கொண்டு வரவேண்டும் என்று தான் படத்தை எடுப்போம். விருது கிடைக்க வேண்டும் என எடுப்பதில்லை. இப்போது தேசிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியே. சிறந்த நடிகைக்கான விருதுக்கு அபர்ணாவுக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. குறைந்த காட்சியிலேயே சிறந்த நடிகை விருது கிடைத்தது என்றால் அவரது உழைப்பு எவ்வளவு இருக்கும். ஆண்களுக்கான படத்தில் பெண்ணுக்கு விருது கிடைத்துள்ளது.
அபர்ணா
நடிகை அபர்ணா அளித்த பேட்டி: உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சூர்யாவுக்கு மட்டும் விருது கிடைக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் எனக்கும் கிடைத்துள்ளது. அனைத்து விதமான பாத்திரங்களையும் சூர்யா சிறப்பாக நடிக்கிறார். அவருக்கு விருது கிடைத்தே ஆகணும்.
யோகிபாபு
சிறந்த இயக்குனர், திரைக்கதை, வசனத்திற்கான விருது பெற்ற மண்டேலா படத்தில் நடித்த யோகிபாபு அளித்த பேட்டி: இயக்குனருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். குழுவாக சேர்ந்து உழைத்ததற்கு பலன் கிடைத்துள்ளது. ஓ.டி.டி.,யில் வெளியானதால், பலருக்கு தெரியாமல் போனது. ஆனால் அதன்பின் படம் பேசப்பட்டது. கிராம அளவில் பல இடங்களில் இப்படம் போய் சேரவில்லை. இப்போது தேசிய விருது கிடைத்துள்ளதால் பலரும் படத்தை பார்க்க முன்வருவர். சிறந்த உழைப்பாளி மடோனா அஸ்வின் இன்னும் அவரை வளர்த்துக் கொள்ள வேண்டும்.