உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் |

பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு என பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் ராஜேந்திரன் என்ற ஆப் டெவலப்பர் வேடத்தில் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல் விஜய் நடித்த குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே. சூர்யாவும் இந்த படத்தில் தற்போது இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு விஜய் நடித்த நண்பன், மெர்சல் போன்ற படங்களில் எஸ்.ஜே. சூர்யா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .




