பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டன. இதனைத் தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் தனது 61 வது படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள கேஜிஎப் சுரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த படத்தின் பூஜையின்போது அடுத்தபடியாக கமல் நடிக்கும் படத்தை தான் இயக்கப் போவதை உறுதிப்படுத்தி இருக்கிறார் ரஞ்சித். அந்த படத்திற்கான கதையை ஏற்கனவே கமலிடத்தில் அவரது பிறந்தநாளின்போதே சொல்லி ஓகே பண்ணி விட்டநிலையில், விக்ரமின் 61வது படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் கமல் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.