அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? | ஒரேநாளில் மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் நடித்த படங்கள் | அப்போ தெரியலையா? வனிதாவை வெளுத்து வாங்கிய கஸ்தூரி |
சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்த ரஜினி அதையடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இதில் ரஜினிக்கு வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகி பாபு ரெடின் கிங்ஸ்லி , சுனில் ரெட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். தற்போது ஜெயிலர் படத்திற்காக ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த செட்டுக்குள்ளேயே படமாக்கப்பட உள்ள நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதி முதல் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.