சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
‛பிசாசு' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‛பிசாசு 2'. பூர்ணாவும் முக்கிய டேத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். முதல்பாகத்தை போன்று இந்த படமும் திரில்லர் பாணியில் தயாராகி உள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகிறது. ஆண்ட்ரியாவே முதன்முறையாக தெலுங்கில் தனது குரலில் டப்பிங் பேசி உள்ளார்.
இந்நிலையில் இந்த படம் வருகிற ஆக., 31ல் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‛‛முழு முதற் கடவுள் விநாயகரின் ஆசியோடு விநாயகர் சதூர்த்தி ஆகஸ்ட் 31 அன்று உங்கள் அபிமான திரையரங்குகளில் பிசாசு2 உலகமெங்கும் வெளியாகிறது'' என தெரிவித்துள்ளது.