சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
தனுஷ் நடித்துள்ள தி கிரேமேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது வாத்தி படத்தில் நடித்து வரும் இவர் அடுத்து ‛சாணிக்காயிதம்' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‛கேப்டன் பில்லர்' என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தகவல் வெளியான நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. மேலும், தற்போது தி கிரேமேன் ஹாலிவுட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்த போது அதில் கலந்து கொண்டார் தனுஷ். அப்போது அவர் நீளமான தலைமுடி மற்றும் தாடி கெட்டத்தில் அசத்தலாக காட்சி கொடுத்தார். இந்த கெட்டப்பில் தான் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர் மற்றும் அமெரிக்காவில் பட புரோமோஷனில் தனுஷ் கலந்து கொண்ட அந்த புகைப்படங்களும் செம மாஸாக இருப்பதாக தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.