'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சாய்பல்லவி நடிப்பில் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் கார்கி. நிவின்பாலி தமிழில் நடித்த ரிச்சி படத்தை இயக்கிய கவுதம் ராமச்சந்திரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள இந்த படத்தில் சாய் பல்லவி ஆசிரியையாகவும் தன் தந்தை மீது போடப்பட்ட பொய்யான வழக்குக்கு எதிராக போராடுபவராகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் பரிசீலனையில் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் தானே இந்த தகவலை கூறியுள்ளார். இந்த கதையையும் கதாபாத்திரத்தையும் கேட்டதும் தன்னைவிட இன்னும் பெரிய நடிகை நடித்தால் தான் கதாபாத்திரம் வலுவாக இருக்கும் என்று கூறியதாகவும் அவரே சாய்பல்லவி பெயரை பரிந்துரை செய்ததாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படி தன்னைத்தேடி வந்த ஒரு நல்ல வாய்ப்பை சக நடிகைக்கு சிபாரிசு செய்யும் ஆரோக்கியமான சூழல் தமிழ் சினிமாவில் நிலவுவது ஆச்சரியமான விஷயம்தான்.