இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். தற்போது தமிழில் அதிகப் படங்களில் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் அடுத்தடுத்து, “இரவின் நிழல், கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, அயலான், மாமன்னன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
இரு தினங்களுக்கு முன்பு 'கோப்ரா' பட இசை வெளியீட்டு நிகழ்வில் படத்தின் பாடல்களை நேரடி இசை நிகழ்ச்சியாக மேடையில் தனது குழுவினர்களுடன் வழங்கினார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அந்த விழாவை நின்று கொண்டே ரசித்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் விடியற்காலையில் தனது சமூக வலைத்தளங்களில் திடீரென ஒரு புகைப்படத்தை எந்த கேப்ஷனும் இல்லாமல் பதிவிட்டுள்ளார். அதை எதற்காகப் பதிவிட்டார் என்பதும் தெரியவில்லை. தமிழ்த் திரையுலகின் மூத்த இசையமைப்பாளர்களான மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் ஏஆர் ரஹ்மான் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் அது. அவர்களது பெயரை மட்டும் குறிப்பிட்டு அந்தப் புகைப்படைத்தைப் பகிர்ந்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.
தமிழ்த் திரையுலகின் முக்கியமான நான்கு இசை மேதைகள் உள்ள அந்த புகைப்படம் ஒரு பொக்கிஷம் என ரசிகர்கள் பலரும் டவுன்லோடு செய்துள்ளார்கள் என்பது சமூக வலைத்தளங்களில் இருக்கும் பதிவுகளைப் பார்த்தாலே தெரிகிறது.