Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ்

06 ஜூலை, 2022 - 11:36 IST
எழுத்தின் அளவு:
9-films-releasing-on-8th-July

2022ம் ஆண்டின் அரையாண்டில் சுமார் 65 படங்கள் தியேட்டர்களில் வெளிவந்தன. வாரத்திற்கு நான்கைந்து படங்கள்தான் வெளியாகின. வெளியான 65 படங்களில் 6 படங்கள்தான் வியாபார ரீதியாக வசூலைப் பெற்றன. மற்ற படங்கள் நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தின. சில படங்கள் வந்த அடையாளம் தெரியாமல் ஓடிப் போயின.

இந்த வாரம் ஜுலை 8ம் தேதி 9 படங்கள் தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். ஓரளவிற்குத் தெரிந்த முகங்கள் உள்ள படம் என்று பார்த்தால் கருணாகரன், யோகிபாபு நடித்து வெளிவரும் 'பன்னிகுட்டி' படத்தை மட்டுமே சொல்ல முடியும். மற்ற படங்கள் அதிகம் தெரியாத நடிகர்கள் நடித்து வெளிவரும் படங்களாகவே உள்ளன.

'விக்ரம்' படம் ஜுலை 8ம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவர இருப்பதால் அந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுவிடும். கடந்த வாரம் வெளியான மூன்று படங்களின் தியேட்டர்களும் நிறையவே குறைக்கப்பட்டுவிடும். அதனால், இந்த வாரம் வெளிவரும் படங்களுக்கு தியேட்டர்கள் ஓரளவிற்குக் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், எத்தனை படங்கள் அதில் தாக்குப் பிடித்து ஓடும் என்பது வழக்கம் போல புரியாத புதிர்தான்.

ஜுலை 8ம் தேதி, “எண்ணித் துணிக, பன்னிகுட்டி, கிரான்மா, படைப்பாளன், நாதிரு தின்னா, பெஸ்டி, பாரின் சரக்கு, கிச்சி கிச்சி, வாட்ச், ஒற்று” ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை படம் சொன்னபடி வெளியாகும் என்பது அன்றுதான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'ஜெய் ஹிந்த்' என சொல்ல மறுத்தது ஏன்? சூர்யாவுக்கு காயத்ரி கடும் எச்சரிக்கை!'ஜெய் ஹிந்த்' என சொல்ல மறுத்தது ... இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06 ஜூலை, 2022 - 18:21 Report Abuse
Natarajan Ramanathan யோகி பாபு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in