2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் |

2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசனும், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிட்டார்கள். அந்த தொகுதியில் கமல்ஹாசன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இந்த தோல்விக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனத்தை திருப்பினார் கமல்ஹாசன். அப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான விக்ரம் படம் அமோகமான வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக, கமல்ஹாசனின் திரையுலக வாழ்வில் மீண்டும் இந்த படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி இருப்பதால் சினிமாவில் புதிய உற்சாகத்துடன் அவர் பயணிக்க தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் விக்ரம் படத்தை பார்த்துள்ளார் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி சீனிவாசன். அதையடுத்து அவர் தனது டுவிட்டர் பதிவில், தேர்தலில் உங்களை வெற்றி பெற்றதற்காக மீண்டும் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். விக்ரம் படத்தை பார்த்தேன். உங்கள் கலைப்பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.