'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன் | சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் | அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுரேஷ்கோபி நடித்த மேல்விலாசம் மற்றும் அப்போதேகேறி என இரண்டு படங்களை இயக்கியவர் இயக்குனர் மாதவ் ராமதாஸ்.. இந்த இரண்டு படங்களுமே வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தன. குறிப்பாக மேல்விலாசம் திரைப்படம் ஒரு நீதிமன்ற அறையிலேயே ஒண்ணே முக்கால் மணி நேரம் வெறும் விசாரணை சம்பந்தப்பட்ட காட்சிகளாகவே முழுவதும் படமாக்கப்பட்டிருந்தது.. இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.. அதேபோல மருத்துவமனையை மையப்படுத்தி உருவாகி இருந்த அப்போதேகேறி படமும் மருத்துவம், ஆன்மா கலந்த ஒரு வித்தியாசமான படமாக உருவாகியிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் மாதவ் ராம்தாஸ் முதன்முதலாக தமிழில் ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சரத்குமார் நடிக்கிறார். இந்த தகவலை சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மாதவ் ராம்தாஸ்