சீரியல் நடிகை வினுஷா தேவி லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ரெங்கநாயகியாக மாறிய லயா : வைரலாகும் போட்டோஸ் | அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு |
திரையுலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பல ஹீரோக்கள் தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரித்து வருவது போல நடிகைகள் பெரிய அளவில் பட தயாரிப்பில் ஈடுபடுவது இல்லை. ஒரு சிலர் மட்டுமே ஒரு பக்கம் பிசியாக நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை டாப்சியும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி அவுட் சைடர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் அடுத்ததாக தான் தயாரிக்க உள்ள படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார் டாப்ஸி.
சமந்தாவைப் பொறுத்தவரை பாலிவுட்டுக்குள் அடி எடுத்து வைத்தாலும் வெப்சீரீஸ் பக்கமே தற்போது அவரது கவனம் இருக்கிறது. ஏற்கனவே பேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்த சமந்தாவுக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதே ராஜ் மற்றும் டிகே. இரட்டை இயக்குனர்களின் மற்றொரு வெப்சீரிஸில் தற்போது நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.