'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஜீ தமிழில் புதிய சீரியல்களை ஒளிபரப்ப துவங்கி உள்ளது. அதற்கான மார்க்கெடிங் பணிகளுக்காக பிரபல நடிகைகளை வைத்து 'வாங்க பார்க்கலாம் - இது நம்ம டைம்' என புரோமோக்களையும் போஸ்டர்களையும் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் 'அமுதாவும் அன்னலெட்சுமியும்' என்கிற தொடர் நேற்று ஜூலை 4 முதல் இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதற்காக வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஹீரோயின் கண்மணி மனோகரன் பச்சை நிற பாவடை தாவணியில் தேவதை போல் நிற்க, பழைய பேப்பர் ஸ்டைலில் 'வாத்தியார் மாப்பிள்ளை தேவை!' என்ற தலைப்புடனும் 'கட்டுனா வாத்தியாரதான் கட்டுவேன்' என்ற சப் டைட்டிலுடனும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதை பார்த்துவிட்டு குவியும் சிலர் 'நானும் வாத்தியார் தான்' என கமெண்ட்களில் அப்ளிகேஷன் போட்டு வருகின்றனர்.