சீரியல் நடிகை வினுஷா தேவி லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ரெங்கநாயகியாக மாறிய லயா : வைரலாகும் போட்டோஸ் | அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீஜே கதிர். தொடர்ந்து அதே சேனலில் பல ஹிட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வரும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' என்கிற தொடரில் வீஜே கதிர் எண்ட்ரி கொடுத்துள்ளார். ஹீரோயினை பெண் பார்க்கும் மாப்பிள்ளையாக கதிர் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் சீரியல் முழுக்க பயணிக்குமா? அல்லது கெஸ்ட் ரோல் மட்டும் தானா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. எனினும், செம்பருத்தி தொடரில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து நீண்ட நாள் கழித்து புதிய சீரியலில் வீஜே கதிர் என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல மேலும் பல சீரியல்களில் வீஜே கதிர் நடிக்க வேண்டும் எனவும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.