'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் பல சமூக சிந்தனை படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர். அவரது ஒரே மகன் விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சந்திரசேகர் நேற்று தன்னுடைய 81வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் கேக்கை தனது மனைவி ஷோபாவுடன் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. வயதான காலத்தில் இருவர் மட்டும் தனியாக பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
படப்பிடிப்பில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள், நடிகைகள் பிறந்தநாள் கொண்டிய போது அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய விஜய், தன்னுடைய அப்பா பிறந்தநாளுக்குக் கூட வரவில்லையா என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளார்கள். விஜய் வெளியூரில் படப்பிடிப்பில இருந்தால் கூட அப்பாவின் மகிழ்ச்சிக்காக வந்திருக்க வேண்டுமல்லவா என்றும் சொல்கிறார்கள். விஜய்க்கும் அவருடைய அப்பா சந்திரசேகருக்கும் கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லை என்ற ஒரு தகவலும் திரையுலகத்தில் உள்ளது.