மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி | பிளாஷ்பேக்: சமூக கதையாக மாற்றப்பட்ட இதிகாச கதை | மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு | ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா |

சுந்தரி என்னும் ஹிட் சீரியலில் கேப்ரில்லா செல்லஸ், ஜிஸ்ணு மேனன், ஸ்ரீகோபிகா நீலாநாத் ஆகியோர் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் சப்போர்ட்டிங் சித்து என்ற சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருபவர் ஜெய் ஸ்ரீநிவாஸ். சுந்தரியின் தோழனாக நடிக்கும் ஜெய் ஸ்ரீநிவாஸூக்கு கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோவாக பில்டப் இருந்தாலும் சீரியலில் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், தற்போது அவர் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்துள்ளார். ‛பெண்ணின் மகத்துவம்' என்ற பைலட் படத்தில் ஜெய் ஸ்ரீநிவாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ள நிலையில் சக நடிகர்களான ஜிஸ்ணு மேனன், கேப்ரில்லா, கிரேஸி தங்கவேல் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.