டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் என பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை படத்தில் நடித்துள்ளார். நாளை (ஜூலை 1) திரைக்கு வரும் இந்த படம் தனக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்று கூறுகிறார். மேலும் இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய வேல் படத்தில் அசின், சிங்கம் படத்தில் அனுஷ்கா ஆகியோரின் கதாபாத்திரம் எப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோ அதேபோன்று யானை படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்.
கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு இந்த படத்தில் ஒரு நல்ல கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனது திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு கிராமத்து கதாபாத்திரம் என்றால் பிரியா பவானி சங்கர் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று சொல்லும் அளவுக்கு எனது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது என்று கூறும் பிரியா பவானி சங்கர், யானை படம் ஒரு நல்ல குடும்ப பாங்கான படத்தில் நடித்த திருப்தியை கொடுத்துள்ளது என்கிறார்.