ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛மாயோன்'. கோயில் பின்னணியில் புதையல் வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதை படக்குழு கொண்டாடினர். இதையடுத்து ‛மாயோன் 2' உருவாகும் என அறிவித்துள்ளனர். இதற்கான போஸ்டரை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். முதல்பாகத்தில் தொடர்ந்த கூட்டணியே இரண்டாம் பாகத்திலும் தொடர உள்ளனர். முதல்பாகத்தில் கிருஷ்ணர் கோயில் பின்னணியில் படம் எடுத்தனர். இரண்டாம் பாகத்தில் முருகனை பின்னணியாக வைத்து படம் எடுக்க உள்ளனர். அதன்வெளிப்பாடாக படக்குழு வெளியிட்ட ‛மயோன் 2' போஸ்டரில் முருகன் சிலை, வேல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளனர். மாயோன் 2 படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.




