ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
தெலுங்குத் திரையுலகின் அழகான இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம் பொத்தினேனி. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் 'தி வாரியர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஜுலை 14ம் தேதி வெளியாக உள்ளது.
2006ம் ஆண்டு வெளிவந்த 'தேவதாசு' தெலுங்குப் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ராம் பொத்தினேனி. “ரெடி, உன்னதி ஒக்கட்டே ஜிந்தகி, கண்டீரகா, பண்டகா சேஸ்கோ, நேனு சைலஜா, ஐ ஸ்மார்ட் சங்கர்” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
பள்ளி காலம் முதல் தன்னுடன் பழகிய தோழி ஒருவரைக் காதலித்து வருகிறாராம். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.
ராம் பொத்தினேனி சென்னையிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர். அந்த பள்ளித் தோழி சென்னையைச் சேர்ந்தவரா என்பது அவர் விரைவில் அறிவிக்கும் போது தெரிந்துவிடும்.