நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் கபி ஈத் கபி தீவாளி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் பிளாட்பார கார் விபத்து, மான் வேட்டை என சர்ச்சைகளில் சிக்கினாலும், இன்னொருபக்கம் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களிலும் தனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் மரம் நடுதலின் அவசியம் குறித்து தனது ரசிகர்களுக்கு வலியுறுத்தும் விதமாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மரக்கன்றுகளை நட்டு தனது ரசிகர்களும் இதேபோன்ற மரம் நடும் பணியில் ஆர்வமாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சல்மான்கான். பிரபலங்களை வைத்து இப்படி மரம் நடுதலின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ராஜ்யசபா எம்பி சந்தோஷ்குமார் இந்த நிகழ்ச்சியின் போது உடனிருந்தார்.
மரம் நடுதலின் அவசியம் பற்றி சல்மான்கான் கூறும்போது, “சந்தோஷ் குமார் விடுத்த கிரீன் இந்தியா சேலஞ்சை நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது என்னுடைய ரசிகர்களுக்கு இந்த மரம் நடும் சவாலை நான் விடுகிறேன். பூமி வெப்பமயமாதலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மனிதரும் மரம் நடவேண்டும். ஒரு மனிதனின் வளர்ச்சி குறிப்பிட்ட உயரம் வந்து நின்றவுடன், அவர்கள் கட்டாயம் மரங்களை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். மரம் என்பது நிலைத்து நிற்கும் மனிதனாகவும் மனிதன் என்பவன் நடமாடும் மரமாகவும் இருக்க வேண்டும். இந்த பந்தம் ரொம்பவே முக்கியமானது” என்று தத்துவார்த்தமாக கூறியுள்ளார் சல்மான்கான்.