அன்பானவரை இழந்து வாடுகிறேன் ; தவறான தகவலை பரப்பாதீங்க - மீனா | அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட் | வின்னர் 2 உருவாகிறது | 20 ஆண்டுகள் ; மாறாத மாதவன் - சிம்ரன் நெகிழ்ச்சி | அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ஹிட் பாடலை பயன்படுத்திய யுவன் | கமலையும், மம்முட்டியும் இணைக்கும் விஸ்வரூபம் எடிட்டர் | திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ? | எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர் | நான் வில்லன் இல்லை ; கடுவா ரகசியம் உடைத்த விவேக் ஓபராய் | குஷ்பு தொடரில் புதிய ஹீரோ |
தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பெனா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. அதையடுத்து தெலுங்கில் சில படங்களில் நடித்தவர், தற்போது ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அதையடுத்து தற்போது பாலா இயக்கி வரும் சூர்யாவின் 41வது படத்தில் நாயகியாக நடித்து வரும் கிர்த்தி ஷெட்டி, மாநாடு பட இயக்குனர் வெங்கட் பிரபு, நாக சைதன்யாவை வைத்து தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்திலும் அடுத்து நடிக்கப் போகிறார். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. அதோடு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இதில் வெங்கட்பிரபு, நாகசைதன்யா, கிர்த்தி ஷெட்டி, யுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதோடு சிறப்பு விருந்தினர்களாக பாரதிராஜா, சிவகார்த்திகேயன், ராணா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
![]() |