'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. அந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் ரயில் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளும் பாஜ, அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களுக்கு விளக்கம் அளித்து அவர்களை அமைதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அக்னிபத் போராட்டம் குறித்து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், அக்னிபத் திட்டம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. இந்த திட்டத்திற்கு போராட்டங்கள் வெடித்திருப்பதை வைத்து பார்க்கும்போது தேச துரோகிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டார்கள். இவர்களை பின்னால் இருந்து யாரோ இருக்கிறார்கள். இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் எப்படி நாளை நாட்டை காப்பாற்றுவார்கள். பொதுச்சொத்தை சேதப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள் தான் என்றார்.