2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சூரரைப்போற்று திரைப்படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. அதற்கு முன்பே 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் மகேசிண் பிரதிகாரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து, பல படங்களில் நடித்தார்.
சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது உடல் எடை அதிகரித்துள்ள அபர்ணா பாலமுரளி. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதில் வருமாறு:
தற்போது உடல் எடை அதிகரித்து இருப்பதால், சமூகவலைத்தளங்களில் என்னை உருவகேலி செய்து வருகிறார்கள். முகத்தை மறைத்துக்கொண்டு, எங்கோ இருந்து கொண்டு ஒருவரை எவ்வளவு வேண்டுமானாலும் கேலி செய்ய முடியும். ஒருவரை விமர்சிக்கும் முன் அவரைபற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்.
பெரும்பாலும் நடிகைகளிடம் அவர்களது நடிப்பை பற்றியோ, நடிகையின் கதாபாத்திரம் பற்றி கேள்வி கேட்காமல், எப்போது கவர்ச்சியாக நடிக்க போகிறீர்கள், எந்த நடிகர்களுடன் நடிக்க உங்களுக்கு ஆசை, எப்போது திருமணம், திருமணம் செய்து கொள்ளும் ஆண் எப்படி இருக்க வேண்டும் என கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்விகளை எல்லாம் கேட்கும் போது எரிச்சலாக இருக்கிறது. தயவு செய்து அந்த கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்றார்.