சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் |
கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் இன்னும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை முன்னிட்டு நடந்த வெற்றி விழாவில் 50க்கும் மேற்பட்ட அயிட்டங்களுடன் விருந்தும் நடந்தது. இந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவு பொருளை தயாரித்தது ஒரு ஹீரோ. மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ்தான் இதன் காரணகர்த்தா. அவர் நடத்தி வரும் மாதம்பட்டி பாகசாலா என்ற கேட்டரிங் நிறுவனத்தின் மூலம்தான் இந்த விருந்து நடந்துள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ், மெஹந்தி சர்க்சுக்கு பிறகு கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படத்திலும் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.