எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட தவறியது. குறிப்பாக விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் கதையை ஒரே மாலில் நடக்கும் சம்பவங்களாக கோர்த்து உருவாக்கி இருந்ததே இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக பலரும் கூறிவந்தனர்.
இந்த படத்தில் பயங்கரவாதிகளில் ஒருவராகவும் பின்னர் அவர்களிடமிருந்து விலகி அப்ரூவராக மாறி விஜய்க்கு உதவுபவராகவும் நடித்திருந்தவர் மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் இந்த படத்தின் மூலம் அடி எடுத்து வைத்த சாக்கோ, தனக்கு இங்கே நல்ல அறிமுகமும் வரவேற்பும் கிடைக்கும் என பெரிதும் நம்பியிருந்தார்.
ஆனால் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பீஸ்ட் படம் குறித்து கூறியுள்ள கருத்துக்கள் அவர் எவ்வளவு ஏமாற்றத்துக்கு ஆளாகி இருந்தார் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளன. குறிப்பாக பீஸ்ட் படத்தையும் அதன் காட்சி அமைப்புகளையும் கிண்டல் அடிக்கும் விதமாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படம் பற்றி ஒரு பேட்டியில், பீஸ்ட் படம் உங்களுக்கு தமிழில் நல்லதொரு என்ட்ரியாக அமைந்ததா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பீஸ்ட் படம் தமிழ் சினிமாவுக்கே ஒரு நல்ல என்ட்ரி ஆக அமையவில்லை என்று பதிலளித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ. மேலும் இந்த படத்தை இப்போது வரை தான் பார்க்கவில்லை என்றும் இந்த படம் குறித்து வெளியான மீம்களை மட்டும்தான் பார்த்ததாகவும் கூறியுள்ள சாக்கோ இந்த படத்தை பார்ப்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், விஜய் அவரை அடித்து துவைத்து கயிற்றில் சூட்கேஸ் போல கட்டி தூக்கிக்கொண்டு வரும் காட்சியில் நடித்தது பற்றி சாக்கோ கூறும்போது, ஒரு ஆளை அப்படி கட்டி தூக்கி வரும்போது குறைந்தபட்சம் அவரின் எடை எவ்வளவு இருக்கும் அதை தூக்கும்போது முகத்தில் எவ்வளவு சிரமப்படுவது போன்று காட்ட வேண்டி இருக்கும் என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஏதோ ஒரு பேப்பர் கட்டை தூக்கி வருவது போல அந்த காட்சியை எடுத்து இருந்தார்கள். அதுதான் அந்த படம் ரொம்பவே போர் அடித்து விட்டதற்கு காரணம்” என்றும் கூறியுள்ளார் ஷைன் தாம் சாக்கோ.
தான் தமிழில் நடித்த முதல் படத்தையே இன்னும் அவர் பார்க்கவில்லை என கூறியுள்ளதும் படம் பற்றியும் அதில் நடித்த விஜய்யின் நடிப்பு பற்றியும் அவர் விமர்சித்துள்ளதும் விஜய் ரசிகர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.