ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? |
எம்ஜிஆர், கமல் முயற்சித்து செய்ய முடியாதை மணிரத்னம் முடித்து காட்டி உள்ளார். ஆம் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க இவர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அது கை கூடி வரவில்லை. ஆனால் இப்போது பொன்னியின் செல்வன் நாவலை படமாகவே எடுத்து முடித்துவிட்டார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் முதல்பாகம் செப்.,30ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் முதல்பாகத்தின் டீசரை வருகிற ஜூலை 7ம் தேதி, சோழ மன்னான தஞ்சாவூரில் பிரம்மாண்ட விழாவாக நடத்தி வெளியிட எண்ணி உள்ளார் மணிரத்னம்.