இரண்டரை மணிநேர மேக்கப் ; ஜி.டி.நாயுடுவாக மாதவன் லுக் வெளியீடு | சஞ்சய் லீலா பன்சாலியுடன் சந்திப்பு ; ஹிந்தியில் நுழைகிறாரா சிவகார்த்திகேயன்? | பாகுபலியால் ஒரு நாள் தள்ளிப்போகும் ரவிதேஜாவின் 'மாஸ் ஜாதரா' ரிலீஸ் | இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! |

ஐக்கிய அமீரக அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை கடந்த சில மாதங்களாக இந்திய நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். அந்நாட்டில் வாழவும் வேலை செய்யவும் முடியும். பத்து வருடங்களுக்குப் பிறகு விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இந்த விசாவை மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், சுராஜ் வெஞ்சரமூடு, நடிகைகள் , மீரா ஜாஸ்மின், அமலாபால், உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர். இந்த வரிசையில் தற்போது நடிகர் திலீபுக்கு கோல்டன் விசா வழங்கி உள்ளது அமீரகம்.
திலீப் மீது பிரபல நடிகையின் பாலியல் பலாத்கார வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் சிறை செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் திலீபுக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி இருப்பது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் அமீரகத்தின் கோல்டன் விசா என்பது அந்த நாடு அளிக்கும் கவுரவம் ஆகும். அப்படி இருக்கும்போது பாலியல் குற்றச்சாட்டில் இருக்கும் ஒருவருக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து அதிருப்தி நிலவுகிறது.