‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானாலும் கூட நடிகை சாய்பல்லவிக்கு தெலுங்கு தேசத்தில் தான் ரசிகர்கள் அதிகம். அதற்கேற்ற மாதிரி அவரும் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி நடிப்பில் வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகியுள்ள விராட பருவம் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. ஒருபக்கம் மதம் சம்பந்தமாக சாய்பல்லவி கூறிய கருத்துக்கள் மத உணர்வாளர்களிடம் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி அதனால் சாய்பல்லவிக்கு எதிராக அவர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
ஆனால் இன்னொரு பக்கம் சாய்பல்லவி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். நேற்று விராட பருவம் வெளியாகியுள்ள ஒருசில தியேட்டர்களுக்கு படம் பார்க்க சென்ற சாய்பல்லவி அங்கு தன்னைச் சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது சாய்பல்லவியின் தீவிர ரசிகர் ஒருவர் அவரது உருவத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டுப் போன சாய்பல்லவி அந்த ரசிகரை அழைத்து அவருடன் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ரசிகரின் மகிழ்ச்சியும் சாய்பல்லவியின் நெகிழ்ச்சியுமாக அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.




