ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி'. இந்த படத்தில் சிம்ரன், ரவி ராகவேந்திர ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. தமிழ், ஹிந்தி , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
சில மாதங்களுக்கு வெளியான இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 'ராக்கெட்ரி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் மாதவன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அதோடு ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் என்ற மியூசிக் வீடியோ ஒன்றையும் மாதவன் வெளியிட்டார். தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.