சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
பி .எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தற்போது 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். ராஷி கண்ணா மற்றும் ரெஜிஷா விஜயன் ஆகியோர் கார்த்தியுடன் இணைந்து நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வித்யாசமான போலீஸ் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமைகளை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆட்சி மாற்றத்திற்கு பின் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி வருகிறது. அந்தவகையில் ரஜினி, விஜய், கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், பிரபாஸ், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சமீபத்திய படங்களை கைப்பற்றி தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் நிறுவனம் தற்போது சர்தார் படத்தையும் கைப்பற்றி உள்ளது. மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களையும் வெளியீட உள்ளது.