பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

எஸ்எஸ் ராஜமவுலி வழங்க அயன் முகர்ஜி இயக்கத்தில், பிரிதம் இசையமைப்பில், ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பிரம்மாஸ்திரம்'. மூன்று பாகத்தில் தயாராக உள்ள இப்படத்தின் முதல் பாகம் 'பிரம்மாஸ்திரம் - ஷிவா' டிரைலர் இன்று யு டியுபில் வெளியிடப்பட்டது. ஹிந்தியில் தயாராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
நீர், காற்று, நெருப்பு ஆகியவை பண்டைய காலத்திலிருந்தே இந்த சக்திகள் சில அஸ்திரங்களுக்குள் நிறைந்திருக்கிறது. இது போல இருக்கும் அஸ்திரங்களுக்கெல்லாம் அதிபதி பிரம்மாஸ்திரம். அந்த மகா பிரம்மாஸ்திரத்திற்கான அதிபதியே தான் தான்னு தெரியாத ஷிவா என்ற இளைஞனைப் பற்றிய கதைதான் இந்த முதல் பாகம்.
நெருப்பு சக்தி அடங்கிய ஷிவா கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மவுனி ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆலியா பட், ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்துள்ளார். டிரைலரில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் காட்சிகள் வியக்க வைக்கின்றன.
'பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்கள் பாலிவுட்டில் பெரிய வெற்றியைப் பெற்றன. அந்தப் படங்களில் இருந்த பிரம்மாண்டத்தை இந்த பிரம்மாஸ்திரம் டிரைலரில் காண முடிகிறது.
இப்படி ஒரு படத்திற்காகத்தான் பாலிவுட் ஏங்கிக் கொண்டிருக்கிறது என தாரளமாகச் சொல்லலாம். இந்த வருடம் செப்டம்பர் 9ம் தேதி இந்தப்ப டம் வெளி வருகிறது.