கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

நடிகர் சூர்யா மற்றும் பாலா இருவரும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூட்டணி சேர்ந்து சூர்யா 41 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படம் மூலம் இணைந்துள்ளனர். இந்த படம் டிராப் ஆகி விட்டது என்று கூட சில வாரங்களுக்கு முன்பு செய்தி பரவியது. ஆனால் சூர்யா அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சூர்யா தற்போது பாலா படத்தின் ஷூட்டிங்கை மேலும் தள்ளிப்போட்டிருக்கிறார். அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல இருக்கிறார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு தான் பாலா பட ஷூட்டிங்கில் அவர் பங்கேற்பாராம். கோவாவில் அடுத்தகட்ட ஷூட்டிங் ஒரு மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.