நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் யானை. தனது மைத்துனர் என்றாலும் அவரை வைத்து பல வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. வரும் ஜூன் 17ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் இயக்குனர் ஹரியும், அருண் விஜய்யும் பல நகரங்களுக்கு சென்று அங்குள்ள திரையரங்குகளுக்கு விசிட் அடித்து ரசிகர்களுடன் உரையாடி இந்தப்படத்திற்கு புரமோசன் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் சூழல் உருவாகி இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. காரணம் கடந்த வாரம் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து இந்தவாரமும் படத்திற்கு வரவேற்பு இருப்பதால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் விக்ரம் படத்தை தொடர எண்ணி உள்ளனர். அதுமட்டுமல்ல ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கியுள்ள வீட்ல விசேஷம் திரைப்படம் வரும் ஜூன் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கும் பல தியேட்டர்கள் செல்வதால் யானை படத்திற்கு குறைந்த தியேட்டர்களே கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. படம் பிரம்மாண்டமாய் உருவாகி இருப்பதால் குறைந்த தியேட்டர்களில் வெளியிட படக்குழுவிற்கு மனம் இல்லை. மேலும் விநியோகஸ்தர்கள் தரப்பிலும் யானை படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட ஆர்வம் காட்டுவதால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கும்படி கேட்டு வருகின்றனர். இதனால் யானை படம் வெளியீடு தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளது. ஏற்கனவே மே மாதம் வெளியாவதாக இருந்த இந்த படம் ஜூன்-17 க்கு மாற்றி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.