என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் 19ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அவருக்கு அமெரிக்காவில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து டி.ஆர். நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக மருத்துவ ஏற்பாடுகளை செய்வதற்க்காக கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் சிம்பு, அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.