இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
நடிப்பிற்கும், நாட்டியத்திற்கும் பேர் போனவர் இந்திய சினிமாவின் நாட்டிய பேரொளி என்று அழைக்கப்படும் நடிகை பத்மினி. பப்பிமா என சினிமாவில் செல்லமாக அழைக்கப்படும் பத்மினியின் 90வது பிறந்ததினம் இன்று. அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்...
திருவாங்கூர் சகோதரிகள்
1950 - 60களில் தென்னிந்திய சினிமாவின் ராணியாக வலம் வந்தவர் நாட்டிய பேரொளி பத்மினி. கேரள மாநிலம் திருவிதாங்கூரில் 12 - ஜுன் - 1932ல் தங்கப்பன் - சரஸ்வதி அம்மா தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். தனது நான்காவது வயதிலேயே நாட்டியப் பயிற்சியை மேற்கொண்டார். இவரது சகோதரிகளான லலிதா மற்றும் ராகினி ஆகியோரும் சிறந்த நாட்டியக் கலைஞர்கள். இவரது 10வது வயதில் முதல் நாட்டிய அரங்கேற்றம் அரங்கேறியது. பரதநாட்டியம், கதகளி, மணிப்புரி, குச்சுப்புடி மற்றும் மோகினியாட்டம் என அனைத்து நடனக்கலைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்று சிறந்த நடனக் கலைஞர்களாக வலம் வந்த இச்சகோதரிகள் திருவாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர்.
முதல் அறிமுகம்
நடனக் கலைஞர் உதயசங்கர், தான் எழுதி இயக்கிய "கல்பனா" என்ற ஹிந்திப் படத்தில் 17 வயதே நிரம்பியிருந்த பத்மினியை முதன் முதலில் திரை நட்சத்திரமாக வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தினார். இளம் நடனக்கலைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் ஆரம்ப காலங்களில் ஏராளமான படங்களில் நடனக் கலைஞர்களில் ஒருவராக இவர் திரையில் தோன்றியிருந்தாலும், இயக்குநர் கே.ராம்நாத் இயக்கி, எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு தயாரித்து, 1950 ஆம் ஆண்டு வெளிவந்த "ஏழை படும் பாடு" என்ற படத்தில் முதன் முதலாக முக்கிய வேடமேற்று நடித்திருந்தார்.
சிவாஜி உடன் அதிக படம்
ஏ.எல்.சீனிவாசன் தயாரித்து, என்எஸ் கிருஷ்ணன் இயக்கத்தில் 1952ல் வெளிவந்த "பணம்" திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய திருப்பத்தை தமிழ் திரையுலகில் ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். மேலும் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த முதல் திரைப்படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு.இதற்குப் பிறகு சிவாஜியோடு அதிகமான படங்களில் நாயகியாக நடித்த ஒரே நடிகை பத்மினி என்ற பெருமையும் இவரையே சாரும். ஏறக்குறைய 59 படங்களில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கினறார் என்பது குறிப்பிடதக்கது.
மறக்க முடியாத ‛வஞ்சிக்கோட்டை வாலிபன்' நடனம்
எம்.ஜி.ஆர் உடன் "மதுரை வீரன்", "ராஜராஜன்", "மன்னாதி மன்னன்", "அரசிளங்குமரி", "விக்கிரமாதித்தன்" போன்ற பல படங்களில் ஜோடியாகவும் நடித்திருக்கின்றார். "வஞ்சிக்கோட்டை வாலிபன்" திரைப்படத்தில் பத்மினி, வைஜெயந்தி மாலாவுடன் இணைந்து நடனமாடும் போட்டி நடனம் இன்றளவும் இவரை ரசிகர்கள் மனங்களில் நினைவு கொள்ளும் என்றால் அது மிகையன்று.
காலம் கடந்து நிற்கும் "தில்லானா மோகனாம்பாள்"
அதேபோல் "தில்லானா மோகனாம்பாள்" திரைப்படத்தில் மோகனாம்பாள் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பது காலங்கள் கடந்து இன்றும் ஒரு கலைப் பொக்கிஷமாக ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பது இவருடைய நடிப்பிற்கும், நாட்டியத்திற்கும், அழகிற்கும் ஒரு சான்றாக நிலைத்து நிற்கிறது.
250 படங்கள்
ஏம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், என்.டி.ராமாராவ், ராஜ்குமார், பிரேம் நசீர், சத்யன், ராஜ்கபூர், ஷம்மிகபூர், என இந்திய திரைத்துறையின் அனைத்து ஜாம்பவான் நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமை இவருக்குண்டு. 1961ல் ராமச்சந்திரன் என்னும் அமெரிக்க வாழ் மருத்துவரை திருமணம் புரிந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கே நீயூ ஜெர்ஸியில் ஒரு பாரம்பரிய நாட்டியப் பள்ளி ஒன்றையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியும் வந்தார். இந்தியாவின் பல மொழிகளில் சுமார் 250 படங்களில் இவர் நடித்துள்ளார். மேடை நாடகங்கள் மற்றும் டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். பத்மினி தனது 74வது வயதில் மறைந்தார்.
கவுரவம்
தமிழக அரசின் "கலைமாமணி விருது", தமிழக அரசு விருது, பிலிம் பேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் பத்மினி. சோவியத் ஒன்றியம் "அஞ்சல் தலை" வெளியிட்டு இவரை கவுவித்துள்ளது.
பத்மினி நடித்து வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்
1.கன்னிகா - 1947 - துணை நடிகை
2.கீதா காந்தி - 1948 - துணை நடிகை
3.வேதாள உலகம் - 1948 - துணை நடிகை
4.கோகுலதாசி - 1948 - துணை நடிகை
5.மோகினி - 1948 - துணை நடிகை
6.ஞான சௌந்தரி - 1948 - துணை நடிகை
7.மகாபலி - 1948 - துணை நடிகை
8.போஜன் - 1948 - துணை நடிகை
9.பக்தஜனா - 1948 - துணை நடிகை
10.ஆதித்தன் கனவு - 1948 - துணை நடிகை
11.தேவமனோகரி - 1949 - துணை நடிகை
12.வாழ்க்கை - 1949 - துணை நடிகை
13.மாயாவதி - 1949 - துணை நடிகை
14.வினோதினி - 1949 - துணை நடிகை
15.வேலைக்காரி - 1949 - துணை நடிகை
16.நாட்டியராணி - 1949 - துணை நடிகை
17.பவளக்கொடி - 1949 - துணை நடிகை
18.மங்கையர்க்கரசி - 1949 - துணை நடிகை
19.கன்னியின் காதலி - 1949 - துணை நடிகை
20.லைலா மஜ்னு - 1949 - துணை நடிகை
21.விஜயகுமாரி - 1950 - துணை நடிகை
22.கிருஷ்ண விஜயம் - 1950 - துணை நடிகை
23.மந்திரி குமாரி - 1950 - துணை நடிகை
24.திகம்பர சாமியார் - 1950 - துணை நடிகை
25.பாரிஜாதம் - 1950 - துணை நடிகை
26.இதயகீதம் - 1950 - துணை நடிகை
27.பொன்முடி - 1950 - துணை நடிகை
28.மருதநாட்டு இளவரசி - 1950 - துணை நடிகை
29.ஏழை படும் பாடு - 1950 - கதாநாயகி
30.வனசுந்தரி - 1951 - துணை நடிகை
31.சிங்காரி - 1951 - துணை நடிகை
32.தேவகி - 1951 - துணை நடிகை
33.ஓர் இரவு - 1951 - துணை நடிகை
34.மணமகள் - 1951 - கதாநாயகி
35.தர்ம தேவதை - 1952 - துணை நடிகை
36.அமரகவி - 1952 - துணை நடிகை
37.அந்தமான் கைதி - 1952 - துணை நடிகை
38.காஞ்சனா - 1952 - துணை நடிகை
39.வேலைக்காரன் - 1952 - துணை நடிகை
40.பணம் - 1952 - கதாநாயகி
41.பொன்னி - 1953 - துணை நடிகை
42.உலகம் - 1953 - துணை நடிகை
43.அன்பு - 1953 - கதாநாயகி
44.ஆசைமகன் - 1953 - கதாநாயகி
45.மருமகள் - 1953 - கதாநாயகி
46.தூக்கு தூக்கி - 1954 - கதாநாயகி
47.வைரமாலை - 1954 - கதாநாயகி
48.சொர்க்க வாசல் - 1954 - கதாநாயகி
49.கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - 1954 - கதாநாயகி
50.இல்லற ஜோதி - 1954 - கதாநாயகி
51.எதிhபாராதது - 1954 - கதாநாயகி
52.ராஜகுமாரி - 1955 - கதாநாயகி
53.கதாநாயகி - 1955 - கதாநாயகி
54.கோடீஸ்வரன் - 1955 - கதாநாயகி
55.காவேரி - 1955 - கதாநாயகி
56.மங்கையர் திலகம் - 1955 - கதாநாயகி
57.எல்லாம் இன்ப மயம் - 1955 - துணை நடிகை
58.வெறும் பேச்சு அல்ல - 1956 - கதாநாயகி
59.கண்ணின் மணிகள் - 1956 - கதாநாயகி
60.ஆசை - 1956 - கதாநாயகி
61.ராஜா ராணி - 1956 - கதாநாயகி
62.அமரதீபம் - 1956 - கதாநாயகி
63.மதுரைவீரன் - 1956 - கதாநாயகி
64.மல்லிகா - 1957 - கதாநாயகி
65.பாக்கியவதி - 1957 - கதாநாயகி
66.புதையல் - 1957 - கதாநாயகி
67.ராஜராஜன் - 1957 - கதாநாயகி
68.சம்பூர்ண இராமாயணம் - 1958 - கதாநாயகி
69.மாங்கல்ய பாக்கியம் - 1958 - கதாநாயகி
70.உத்தமபுத்திரன் - 1958 - கதாநாயகி
71.வஞ்சிக்கோட்டை வாலிபன் - 1958 - கதாநாயகி
72.வீரபாண்டிய கட்டபொம்மன் - 1959 - துணை நடிகை
73.தங்கப்பதுமை - 1959 - கதாநாயகி
74.பொன்னு விளையும் பூமி - 1959 - கதாநாயகி
75.மரகதம் - 1959 - கதாநாயகி
76.தெய்வமே துணை - 1959 - கதாநாயகி
77.ராஜபக்தி - 1960 - துணை நடிகை
78.ரிக்ஷா ரங்கன் - 1960 - கதாநாயகி
79.பெற்ற மனம் - 1960 - கதாநாயகி
80.ராஜா தேசிங்கு - 1960 - துணை நடிகை
81.மீண்ட சொர்க்கம் - 1960 - கதாநாயகி
82.மன்னாதி மன்னன் - 1960 - கதாநாயகி
83.தெய்வப்பிறவி - 1960 - கதாநாயகி
84.புனர் ஜென்மம் - 1961 - கதாநாயகி
85.அரசிளங்குமரி - 1961 - துணை நடிகை
86.ஸ்ரீவள்ளி - 1961 - கதாநாயகி
87.விக்கிரமாதித்தன் - 1962 - கதாநாயகி
88.செந்தாமரை - 1962 - கதாநாயகி
89.ராணி சம்யுக்தா - 1962 - கதாநாயகி
90.காட்டு ரோஜா - 1963 - கதாநாயகி
91.வீர தளபதி வேலுத்தம்பி - 1963 - கதாநாயகி
92.நான் வணங்கும் தெய்வம் - 1963 - கதாநாயகி
93.வீராங்கனை - 1964 - கதாநாயகி
94.தாயே உனக்காக - 1966 - கதாநாயகி
95.சரஸ்வதி சபதம் - 1966 - துணை நடிகை
96.சித்தி - 1966 - கதாநாயகி
97.திருவருட் செல்வர் - 1967 - துணை நடிகை
98.கண் கண்ட தெய்வம் - 1967 - கதாநாயகி
99.பேசும் தெய்வம் - 1967 - கதாநாயகி
100.பாலாடை - 1967 - கதாநாயகி
101.இரு மலர்கள் - 1967 - கதாநாயகி
102.எங்களுக்கும் காலம் வரும் - 1967 - கதாநாயகி
103.குழந்தைக்காக - 1968 - கதாநாயகி
104.திருமாள் பெருமை - 1968 - துணை நடிகை
105.தில்லானா மோகனாம்பாள் - 1968 - கதாநாயகி
106.குருதட்சணை - 1969 - கதாநாயகி
107.விளையாட்டுப்பிள்ளை - 1970 - கதாநாயகி
108.வியட்நாம் வீடு - 1970 - கதாநாயகி
109.பெண் தெய்வம் - 1970 - கதாநாயகி
110.எதிர் காலம் - 1970 - கதாநாயகி
111.ராமன் எத்தனை ராமனடி - 1970 - துணை நடிகை
112.குமார சம்பவம் - 1970 - கதாநாயகி
113.தேரோட்டம் - 1971 - கதாநாயகி
114.திருமகள் - 1971 - கதாநாயகி
115.ஆதிபராசக்தி - 1971 - கதாநாயகி
116.தேனும் பாலும் - 1971 - கதாநாயகி
117.குலமா குணமா - 1971 - கதாநாயகி
118.ரிக்ஷாக்காரன் - 1971 - துணை நடிகை
119.அன்னை வேளாங்கன்னி - 1971 - துணை நடிகை
120.இரு துருவம் - 1971 - கதாநாயகி
121.அப்பா டாட்டா - 1972 - கதாநாயகி
122.தெய்வக் குழந்தைகள் - 1973 - துணை நடிகை
123.அப்பா அம்மா - 1974 - துணை நடிகை
124.தேவி ஸ்ரீகருமாரி அம்மன் - 1974 - துணை நடிகை
125.ஒரு குடும்பத்தின் கதை - 1975 - துணை நடிகை
126.தீபம் - 1977 - துணை நடிகை
127.ஒரே வானம் ஒரே பூமி - 1979 - துணை நடிகை
128.பூவே பூச்சூடவா - 1985 - துணை நடிகை
129.சினிமா சினிமா - 1986 - துணை நடிகை
130.தாய்க்கு ஒரு தாலாட்டு - 1986 - துணை நடிகை
131.ஆயிரம் கண்ணுடையாள் - 1986 - துணை நடிகை
132.லக்ஷ்மி வந்தாச்சு - 1986 - துணை நடிகை