சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் |

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி நேற்று திருமணம் செய்தனர். இந்த நிகழ்வில் இருவரின் குடும்ப உறவுகளும் மிக நெருங்கிய நண்பர்கள் உடன் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் திருமணம் முடித்த கையோடு திருப்பதி சென்று வழிபாடு நடத்தி உள்ளனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. மேலும் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்திலும் இருவரும் பங்கேற்கின்றனர். முன்னதாக தங்களது திருமணத்தையே திருப்பதியில் நடத்த எண்ணினர். ஆனால் அதற்கு ஏற்ற சூழல் அமையாததால் மகாபலிபுரத்தில் திருமணத்தை நடத்தினர். இந்நிலையில் திருமணம் ஆன மறுநாளே இன்று திருப்பதியில் இருவரும் வழிபாடு நடத்தி உள்ளனர். பட்டு - வேஷ்டி சட்டையில் விக்னேஷ் சிவனும், மஞ்சள் நிற பட்டுப்புடவையில் நயன்தாரா என இருவரும் பாரம்பரிய உடையை அணிந்து வந்து வழிபாடு நடத்தினர். இந்த போட்டோ, வீடியோக்கள் வைரலாகி வருகிறது.