காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் சுனைனா. ‛‛நீர்ப்பறவை, சில்லுக்கருப்பட்டி'' உள்ளிட்ட பல படங்களில் கவனம் ஈர்த்தார். தற்போது விஷால் உடன் ‛லத்தி' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அடுத்து ‛ரெஜினா' என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகளில் தயாராகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்குகிறார். தமிழில் இவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்தின் பாடல்களை இசையமைத்து, தயாரிக்கிறார் சதிஷ் நாயர்.
‛‛பெண்களை மையமாகக் கொண்ட 'ஸ்டைலிஷ் திரில்லராக' இந்த படம் இருக்கும் என்று கூறுகிறார் இயக்குநர் டோமின் டி சில்வா. மேலும் அவர் கூறுகையில், நீரோட்டத்திற்கு எதிராக ஒரு மீன் நீச்சலடிப்பதை போல, இப்படம் ஒரு சாதாரண இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரயும் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக இருக்கும், ”என்றார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் மலையாள இயக்குனர் ஆஷிக் அபு ஆகியோர் வெளியிட்டனர்.