இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில், சிரஞ்சீவி, ராம்சரணுடன் இணைந்து அவர் நடித்த ஆச்சரியா படம் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியானது. அதையடுத்து தெலுங்கில் வெளியான எப்-3 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் பூஜா ஹெக்டே.
இந்நிலையில் தற்போது ஹிந்தியில் சர்க்கஸ், கபி ஈத் கபி தீவாளி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஜன கன மன என்ற படத்தில் நடிக்கப் போகிறார். அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு ஒரு ஆக்ஷன் காட்சியும் உள்ளதாம் . அதனால் தற்போது ஒரு வெளிநாட்டு பயிற்சியாளர் இடத்தில் அவர் தீவிர ஆக்ஷன் பயிற்சி எடுத்து வருகிறார். பூரி ஜெகன் இயக்கும் இந்தப் படம் ஒரு தேச பக்தி கதையில் உருவாகிறது.