சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படங்கள் மூலம் உலக புகழ்பெற்றவர் ஜானி டெப். குழந்தை ரசிகர்கள் அதிகம் உள்ள ஹாலிவுட் நடிகரும் இவர் தான். ஜானி டெப் தனது 50வது வயதில் 25 வயது நடிகையான ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணம் 2015ம் ஆண்டு நடந்தது. 15 மாதங்களே ஒன்றாக வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தனர்.
இந்த நிலையில் 2018ம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் ஜானி டெப் பெண் பித்தர் என்றும், மகா குடிகாரர் என்றும், தன்னை தினமும் அடித்து துன்புறுத்தினார் என்றும், இயற்கைக்கு மாறாக உறவு கொண்டார் என்றும் குற்றம் சாட்டி ஆம்பர் ஹேர்ட் எழுதினார். இதனால் ஜானி டெப்பின் சினிமா மார்க்கெட் சரிந்தது. அவருக்கு வந்த பட வாய்ப்புகள் பறிபோனது. பைரேட்ஸ் ஆப் கரிபியன் படத்திற்கும் இன்னொரு நடிகரை தேர்வு செய்தனர்.
அதன்பிறகு ஆம்பர் ஹேர்ட் மீது 380 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜானி டெப் அவதூறுக்கு ஆளாக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிமன்றம் ஆம்பர் ஹெட்டுக்கு 15 மில்லியன் டாலர் (165 கோடி) அபராதம் விதித்தது. இதில் 10 மில்லியன் டாலரை ஜானி டெப்புக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டது.