சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் பேசிய "கடவுள் இல்லைன்னு சொல்லல... இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்" என்கிற வசனம் பிரபலம். இந்த வசனத்தை அவர் பொது மேடைகளிலும் பேசி வருகிறார். இந்த நிலையில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்பதை தேடிச் செல்லும் பயணமாக மாயோன் படம் அமைந்துள்ளதாக படத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. அதன் காரணமாக இன்று வெளியான கமலின் விக்ரம் படத்தோடு மாயோன் படத்தின் டீசரை இணைத்திருக்கிறார்கள்.
சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தசாவதாரம் படத்தில் கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு மாயோன் படத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.இதனால் மாயோன் திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலும் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.