ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
2022ம் ஆண்டின் ஆரம்பமே கொரோனாவின் தாக்கத்தால் தடுமாறியது. ஆனாலும், அது சீக்கிரத்திலேயே முடிவுக்கு வந்து சினிமா தொழிலுக்கு கடந்த இரண்டு வருடங்களாக இருந்த முட்டுக்கட்டைய நீக்கியது. அடுத்தடுத்து சில வெற்றிப் படங்கள் வெளிவந்து தமிழ் சினிமாவை தள்ளாட்டத்திலிருந்து மீட்டது. இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களாக அமைந்த படங்களில், “பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான்” ஆகிய படங்கள் அமைந்தன. இன்று வெளியாகியுள்ள 'விக்ரம்' படமும் வெற்றிப் படமாக அமையும் என படத்தின் முதல் காட்சியைப் பார்த்தவர்கள் சொல்லிவிட்டார்கள்.
மேலே குறிப்பிட்ட நான்கு படங்களுக்கும் இசையமைப்பாளர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அனிருத், “2022ம் ஆண்டு ஆரம்பமானதும், இதை எப்படி கடந்து போகப் போகிறோம் என நினைத்தேன். ஏப்ரல் 13 முதல் ஜுன் வரையில் எங்களுக்கு நான்கு வெளியிடுகள் இருந்தன. 'பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், இப்போது 'விக்ரம்'. இந்தப் படங்களுக்கான இசைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுதான் இன்று நாங்கள் என்ன செய்தோம் என்பதற்கானது. எங்களது இசைக் கலைஞர்கள், குழுவினர் இல்லாமல் இது சாத்தியமில்லை. உங்கள் அனைவருக்கும் எனது அன்புகள். நான் வழக்கமாகச் சொல்வது தான், இன்னும் செல்ல வேண்டும்,” எனக் குறிப்பிட்டு 'விக்ரம்' படத்திற்கு இசையமைத்த மகிழ்ச்சியையும் சேர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.