ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் |
தெலுங்குத் திரையுலகின் 'அழகான ராட்சசி' என ராஷ்மிகா மந்தானாவைச் சொல்லலாம். அவருக்கு அப்படி ஒரு ரசிகர் கூட்டம் தெலுங்கில் இருக்கிறது. தமிழில் 'சுல்தான்' மூலம் அறிமுகமானாலும் அடுத்து விஜய்யுடன் நடிக்கும் படம்தான் அவருடைய அட்டகாசம் ஆரம்பமாக உள்ளது. படத்தின் பூஜையிலேயே தன்னுடைய சிரிப்பால் வசீகரித்தவர்.
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்காக விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவழதை வழக்கமாக வைத்திருப்பவர் ராஷ்மிகா. இன்ஸ்டாவில் கடைசியாக அவர் வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்திற்கு இருபத்தி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.
சாம்பல் நிற லெஹங்கா ஆடையில், மந்தகாசச் சிரிப்பில் மந்தானா இருக்கும் புகைப்படத்துடன், “என்னுடைய சிரிப்பை உங்களுக்கு அனுப்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளதால்தான் இவ்வளவு லைக்ஸ் போலிருக்கிறது.