டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

'வீரமே வாகை சூடும்' படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'லத்தி'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார். ஆனால், இயக்குனருக்குத் தெரியாமல் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். ஏற்கெனவே, நடிகர் சங்க விவகாரங்களில் ரமணா, நந்தா ஆகியோரது பேச்சைத்தான் விஷால் கேட்பதாக முன்னர் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அதனால், விஷால் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் 'லத்தி' பட அறிவிப்பு விவகாரத்தில் படத்தின் இயக்குனருக்கே அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள் விஷால், நந்தா, ரமணா. படம் பற்றிய வெளியீட்டு அறிவிப்பை படத்தின் இயக்குனரான வினோத்குமார் அவரது டுவிட்டர் பதிவில் கூட பகிரவில்லை. படத்தின் வேலைகளை வினோத்குமார் தொடர்ந்து பார்ப்பாரா அல்லது விஷாலும், அவரது நண்பர்களுமே பார்ப்பார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.




