கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக சூர்யாவை மாற்றியதில் முக்கியப் பங்கு வகிப்பவர் இயக்குனர் பாலா. அவரது இயக்கத்தில் சூர்யா நடித்த 'நந்தா' படம் தான் சூர்யாவிடம் இருந்த திறமையை வெளிக் கொண்டு வந்தது. பிதாமகன் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து அசத்தினார்.
அதன்பின் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்காமலே இருந்தார். கடந்த சில வருடங்களாக இயக்கத்தில் ஈடுபடாத பாலா, சூர்யாவின் 41வது பட இயக்குனராக அறிவிக்கப்பட்டார். அது சூர்யா ரசிகர்களுக்கும் மகிழ்வைத் தந்தது. அதே சமயம் சூர்யாவும், பாலாவும் இந்தப் படத்தை பிரச்சினையில்லாமல் கொண்டு செல்வார்களா என்ற சந்தேகமும் திரையுலகத்தில் நிலவியது. 'நந்தா' படத்தில் நடித்த சூர்யா வேறு, இப்போது இருக்கும் சூர்யா வேறு என்பதே அதற்குக் காரணம்.
அதற்கேற்றால் போல முதற்கட்டப் படப்பிடிப்பின் முடிவில் இயக்குனர் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் சண்டை. அதனால், சூர்யா கோபித்துக் கொண்டு போய்விட்டார் என்ற வதந்தி தீயாகப் பரவியது. கடந்த சில நாட்களாக அப்படம் டிராப்பாகி விட்டது என்பது பெரிய செய்தியாகவே இருந்தது.
இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு மற்றுப் புள்ளி வைக்கும் விதமாக படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த சூர்யா, “மீண்டும் செட்டுக்குப் போகக் காத்திருக்கிறேன்…சூர்யா 41” என டுவிட்டரில் பதிவிட்டு வதந்திகளைப் பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.