'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! |

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு நடந்த கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நின்றது. அதன்பின் கொரோனா வந்ததால் மீண்டும் படப்பிடிப்பு நடக்கவில்லை. அதற்குள் படத் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நீதிமன்றம் வரை வழக்கு தொடுக்கப்பட்டது.
'இந்தியன் 2' படம் நின்றதால் கமல்ஹாசன் அடுத்த படம் பற்றி யோசிக்க ஆரம்பித்து 'விக்ரம்' படத்தை ஆரம்பித்து முடித்து அடுத்த மாதம் வெளியிடவும் உள்ளார். நேற்று நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது 'இந்தியன் 2' படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது முடிந்த பின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் தெரிவித்தார்.
'இந்தியன் 2' படம் நின்றதால் ஷங்கர் தெலுங்குப் படம் இயக்கப் போய்விட்டார். அப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு வரை நடக்கும் எனத் தெரிகிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் மீண்டும் 'இந்தியன் 2' ஆரம்பமாகலாம்.