லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

உலக அளவில் அதிக சினிமாக்களும், அதைப் பார்வையிடும் அதிக ரசிகர்களும் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல்வேறு மாநில மொழிகளில் சினிமாக்கள் வெளியானாலும் கடந்த சில வருடங்களாக இந்திய சினிமா என்பது தென்னிந்திய சினிமாக்களையும் குறிப்பிடும்படி அமைந்துவிட்டது.
தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் இரண்டு முறை தேசிய விருது பெற்றவர் நடிகர் தனுஷ். பிரெஞ்ச் மொழிப் படத்தில் நடித்ததற்குப் பிறகு தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்துவிட்டார். அவர் நடித்துள்ள நெட்பிளிக்ஸ் படமான 'த கிரே மேன்' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. 'அவஞ்சர்ஸ்' புகழ் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் ஜுலை 22ம் தேதி வெளியாகிறது.
படத்தின் டிரைலரில் தனுஷ் சில வினாடிகள்தான் வருகிறார். இருந்தாலும் படத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் என்பது டிரைலரின் முடிவில் தெரிகிறது. டிரைலரின் முடிவில் நடிகர்களின் பெயர்கள் வரும் போது தனுஷின் பெயர் எட்டாவதாகத்தான் வருகிறது. ஆனாலும், தமிழ் நடிகர்களுக்கு இதுவரை எட்டாக்கனியாக இருந்து வந்த ஹாலிவுட் படத்தில் தமிழ் நடிகர் தனுஷின் பெயரைப் பார்ப்பது பெருமையான ஒன்றுதான்.