‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'விக்ரம்' படம் ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான பிரமோஷன் வேலைகளை கமல்ஹாசன் விறுவிறுப்பாக ஆரம்பித்துவிட்டார். இதற்காக அவர் பாலிவுட் ஸ்டைலை பின்பற்றுகிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் அவர்கள் முக்கிய டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். முக்கிய மீடியாக்களுக்குத் தவறாமல் பேட்டி கொடுப்பார்கள்.
தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் அப்படியெல்லாம் செய்வதில்லை. ஆனால், அனைத்து விதமான மாற்றங்களுக்கும் எப்போதும் தோள் கொடுக்கும் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்திற்காக பலதரப்பட்ட பிரமோஷன்களைச் செய்ய உள்ளாராம். இன்று சென்னையில் ஆரம்பமாகும் அவரது பத்திரிகையாளர் சந்திப்பு, தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களிலும் நடக்க உள்ளதாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வார நிகழ்ச்சிக்காக சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். அதற்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இது போன்று சில யு டியூப் சேனல்களின் நிகழ்ச்சிகளில் கூட கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளாராம். தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் இதைச் செய்ய திட்டமாம்.
ஏற்கெனவே, ஹிந்தியில் கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒரு படத்தை எப்படியெல்லாம் பிரமோஷன் செய்ய வேண்டும் என்பதை ஏனைய தமிழ் நடிகர்கள் கமல்ஹாசனிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.