நடிகை டூ ஓவியக் கலைஞர்: ஷாம்லியின் தனித்துவ வளர்ச்சி | கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு | பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா | 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா | பிளாஷ்பேக்: எக்ஸ்பிரஸ் கவிஞர் | 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத் | நுரையீரல் பிரச்னை : கன்னட நடிகை ரஷ்மி லீலா மரணம் | நுகர்வு, சுவை திறனை இழந்த மம்முட்டி | 'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? |

ராதிகா சரத்குமாரின் புகழ்பெற்ற தொடரான சித்தியின் 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இதில் ராதிகா நடித்தார். அதன்பிறகு விலகிக் கொண்டார். 500 எபிசோட்களை தாண்டிய இந்தத் தொடர் விரைவில் முடிவடைய உள்ளது. இதை தொடர்ந்து கலைஞர் டிவியில் ராதிகா தயாரிப்பு, நடிப்பில் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. பொன்னி c/o ராணி என்று அதற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் ராணி கேரக்டரில் ராதிகாக நடிக்கிறார், பொன்னி கேரக்டரில் ப்ரீத்தி சஞ்சீவ் நடிக்கிறார். அழகான கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னையை ராணியும், பொன்னியும் சேர்ந்து எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் இதன் கதை.




