எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீநிதி. கேரளாவை சேர்ந்த இவர் பல்வேறு சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வந்துள்ளார். தமிழ்நாட்டிலும் தற்போது இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். செந்தூரப்பூவே தொடர் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த எந்த சீரியலில் கமிட்டாக போகிறார் என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் திரைத்துறையில் தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், 'நான் பத்தாவது படிக்கும் போது எனக்கு மலையாள படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் என் அம்மாவுடன் ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். அங்கே அட்ஜெஸ்ட் செய்ய முடியுமா என்று கேட்டார்கள். எங்களுக்கு அப்போது புரியவில்லை. மீண்டும் அனைத்திலும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நாங்கள் அந்த மாதிரி குடும்பத்திலிருந்து வந்தவர்கள் இல்லை என்றோம். உடனே அவர்கள் மகள் இல்லை என்றால் கூட பரவாயில்லை. அம்மா ஓகே தான் என்று சொன்னார்கள். அம்மா மனசு உடைந்து போய்விட்டார். உடனே நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்' என்று கூறியுள்ளார். இந்த பேட்டி வைரலாகி சமூக வலைத்தளங்களில் பரவ ஹீரோயினின் அம்மாவை கூட விடமாட்டீங்களா? என ரசிகர்கள் கொந்தளித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.