நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
ராதிகா சரத்குமாரின் புகழ்பெற்ற தொடரான சித்தியின் 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இதில் ராதிகா நடித்தார். அதன்பிறகு விலகிக் கொண்டார். 500 எபிசோட்களை தாண்டிய இந்தத் தொடர் விரைவில் முடிவடைய உள்ளது. இதை தொடர்ந்து கலைஞர் டிவியில் ராதிகா தயாரிப்பு, நடிப்பில் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. பொன்னி c/o ராணி என்று அதற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் ராணி கேரக்டரில் ராதிகாக நடிக்கிறார், பொன்னி கேரக்டரில் ப்ரீத்தி சஞ்சீவ் நடிக்கிறார். அழகான கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னையை ராணியும், பொன்னியும் சேர்ந்து எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் இதன் கதை.